கோவில்பட்டி அருகே மின்கம்பத்தில் கார் மோதி 2 பேர் பலி
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள இடைசெவல் பஸ் நிறுத்தம் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் மதுரையில் இருந்து அம்பை நோக்கி சென்ற கார் , சாலையின் அருகே இருந்த மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில் மதுரை கரிமேடு பகுதியைச் சேர்ந்த கோபால் (40), முருகன் (54) ஆகியோர் சம்பவ இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர்.மேலும் காரில் வந்த ஹரி (44), ரகுநாதன் (39) இரண்டு பேரும் காயம் அடைந்தனர். தகவல் அறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். நாலாட்டின்புதூர் போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!