dinamalar telegram
Advertisement

சிவசங்கர் பாபாவுக்கு சிகிச்சை சிறைத் துறைக்கு உத்தரவு

Share
சென்னை : மாணவியருக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக தொடரப்பட்ட வழக்கில், பள்ளியின் தாளாளரான சிவசங்கர் பாபா கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.பார்வை குறைபாடு, இதய நோய் உள்ளிட்ட பிரச்னைகளால், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற அனுமதிக்கக் கோரி, உயர் நீதிமன்றத்தில் சிவசங்கர் பாபா வழக்கு தொடர்ந்தார்.


மனு, நீதிபதி நிர்மல்குமார் முன் விசாரணைக்கு வந்தது. சிவசங்கர் பாபாவுக்கு உரிய சிகிச்சை வழங்கப்படுவதாகவும், சிறப்பு சிகிச்சை தேவைப்பட்டால், அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்து செல்வதாகவும், அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, 'அரசு மருத்துவமனையில் சில வசதிகள் இல்லை என்றால், அவர்களே வேறு மருத்துவமனைக்கு பரிந்துரை செய்ய நடவடிக்கை எடுக்கின்றனர். சிறப்பு மருத்துவ சிகிச்சை தேவை என அரசு டாக்டர் பரிந்துரைத்தால், அதை சிறைத்துறை பரிசீலிக்க வேண்டும்' என நீதிபதி நிர்மல்குமார் உத்தரவிட்டார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement