dinamalar telegram
Advertisement

ஊட்டியில் பலத்த காற்றுடன் மழை: ராட்சத மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

Share
Tamil News
ஊட்டி: நீலகிரியில், கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இன்று காலை 8:00 மணி நிலவரப்படி, மாவட்டத்தில், குந்தா, 73 மி.மீ., அவலாஞ்சி, 55 மி.மீ., பிற இடங்களில், 30 மி.மீ., வரை மழை பதிவாகியுள்ளது. சராசரி மழை அளவு, 22.55 மி.மீ., பதிவாகியுள்ளது. நேற்றிரவு காற்றுடன் பெய்த மழைக்கு, ஊட்டி பஸ் ஸ்டாண்ட் பகுதியில், உட்லண்ட்ஸ் - ஏ.டி.சி., சாலையில் ராட்சத மரம் சாலையின் குறுக்கே விழுந்தது. மின்சாரம் துண்டிக்கப்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தீயணைப்பு துறையினர் மரத்தை பவர் மெஷின் உதவியுடன் அறுத்து அகற்றினர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement