dinamalar telegram
Advertisement

சுவர் இடிந்து இருவர் பலி

Share
Tamil News

தஞ்சாவூர் : தஞ்சாவூரில் வீட்டு சுவர் இடிந்து 5 வயது சிறுவன், மூதாட்டி பலியாகினர்.



தஞ்சாவூர் மாவட்டத்தில், நேற்று முன்தினம் இரவு முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மாவட்டத்தில், 45 கூரை வீடுகளும், 14 ஓட்டு வீடுகளும் இடிந்து சேதமடைந்தன. சின்ன முத்தாண்டிப்பட்டியைச் சேர்ந்தவர் சலீம்; இவரது மகன் அசாருதீன், 5. வீட்டில் நேற்று முன்தினம் இரவு துாங்கி கொண்டிருந்தனர். வீட்டின் மண் சுவர் மழையால் ஊறி இருந்ததால் அதிகாலை, 2:30 மணியளவில் இடிந்து விழுந்தது. இடிபாடுகளில் சிக்கி அசாருதீன் இறந்தான். காயமடைந்த சலீமை, மருத்துவமனையில் அனுமதித்தனர்.


பேராவூரணி அருகே பூங்குடிக்காடு கிராமத்தைச் சேர்ந்த மூதாட்டி சிவபாக்கியம், 85. தன் மகன் மாடி வீட்டு அருகே, தனியாக குடிசை வீட்டில் வசித்து வந்தார். மழையால், நேற்று முன்தினம் இரவு வீட்டின் மண் சுவர் இடிந்து விழுந்ததில், சிவபாக்கியம் உயிரிழந்தார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement