dinamalar telegram
Advertisement

அமெரிக்காவில் அடிமைத்தனத்தை ஆதரித்த 187 ஆண்டு பழமையான தாமஸ் ஜெப்பர்சன் சிலை அகற்றம்

Share
வாஷிங்டன்: பல்வேறு அரசு நிறுவனங்கள் செயல்படும் அமெரிக்காவிவின் புகழ் பெற்ற நியூயார்க் சிட்டி ஹாலில் இருந்து அடிமை முறையை ஆதரித்த தாமஸ் ஜெப்பர்சன் சிலை அகற்றப்பட்டது. தாமஸ் ஜெப்பர்சன் அமெரிக்காவின் 3வது அதிபராக தேர்வு செய்யப்பட்டவர் ஆவார்.

மக்கள் அதிகம் வந்து செல்லும் வாஷிங்டனில் உள்ள இந்த நினைவுச் சின்னம் நாட்டின் தலைநகரில் பிரபலமானது. 7 மணி நேரமாக இந்த சிலையை மாற்றும் பணி கவனமாக நடந்தது. இந்தச்சிலை வரலாற்று புகழ்மிக்க சொசைட்டி ஹாலில் வைக்கப்பட்டது.
அமெரிக்காவில் அடிமை முறையை ஆதரித்தவர் ஜெப்பர்சன். அவரே 600 அடிமைகளுக்கு உரிமையாளராக இருந்தார். இதனாலேயே அவரது சிலையை வைத்திருப்பதற்கு எதிர்ப்பு இருந்து வந்தது. இதையடுத்தே அவரது சிலையை அகற்ற முடிவு செய்யப்பட்டது.சிலை அகற்றம் தொடர்பாக நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் அகற்றத்திற்கு ஆதரவாகவே ஓட்டுக்கள் கிடைத்தன.

அமெரிக்காவின் மூன்றாவது ஜனாதிபதி மற்றும் சுதந்திர பிரகடனத்தின் முதன்மை எழுத்தாளர் தாமஸ் ஜெபர்சன் ஆவார். வர்ஜீனியாவின் காமன்வெல்த் ஆளுநராக இருந்த கான்டினென்டல் காங்கிரசில் உறுப்பினராகவும், முதல் அமெரிக்க வெளியுறவு செயலாளர், அமெரிக்காவின் இரண்டாவது துணைத் தலைவராகவும், வர்ஜீனியாவிலுள்ள சார்லட்டெஸ்வில்லியில் வர்ஜீனியா பல்கலைக்கழகத்தின் நிறுவனராகவும் இருந்தார்.
தாமஸ் ஜெபர்சன் அமெரிக்காவை உருவாக்கியவர்களில் ஒருவர். இந்த சிலை அகற்றத்திற்கு ஆதரவாகவும், எதிராகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (18)

  • mindum vasantham - madurai,இந்தியா

    நூதனமான முறையில் இன்னமும் அடிமை தானம் உள்ளது உண்மையில் கிருஷ்ணன் , ராமர் கரிய அழகன் என்றே கூறியுள்ளது நம் கதைகள் கருமை வலிமை என்றே கூறியுள்ளது , ஆனால் கரிய நிற மக்கள் மீது இன்று மத்த கலாசார தாக்கத்தால் இன்று நம் நாட்டிலே பாகுபாடு காட்ட படுகிறதே ,கோச்சார ரீதியாக இன்னமும் மேற்கத்திய அடிமை தானம் உள்ளது

  • ஆரூர் ரங் -

    ஆங்கிலேய அடிமையாக உருவான கட்சி நீதிக் கட்சி😪. அதன் வாரிசுகள் தான் தி.க திமுக

  • KavikumarRam - Indian,இந்தியா

    தமிழ் நாட்டிலும் இந்த ஆங்கிலேய அடிமை சின்னங்கள் அனைத்தையும் வேரறுக்க வேண்டும், திக, தீயமுக, நீதிமன்றங்களின் கோடை கால விடுமுறைகள், வக்கீல் மற்றும் நீதிபதிகளின் கருப்பு அங்கி, மைலார்டு என்று விளிப்பது ரிப்பன் கட்டிடம், போன்ற அனைத்தையு ஒழித்து கட்ட வேண்டும்.

    • Priyan Vadanad - Madurai,இந்தியா

      ஆமாம் மை லார்டு. நீங்க சொல்லிடீங்க இல்லியா? ஆர்டர் போட்றுவோம்.

  • DVRR - Kolkata,இந்தியா

    அப்படிப்பார்த்தா நம்ம டாஸ்மாக்கினாட்டிலே எல்லா சிலையையும் அகற்ற வேண்டி வருமே மடியல் அரசு யோசிக்கின்றது

  • Sampath Kumar - chennai,இந்தியா

    இன்னும் கொஞ்ச நாளில் இங்கும் நடக்க போகிறது எதனை சிலைகளை அகற்றுவது என்பதில் மக்களுக்கு குழப்பம் வரும்

Advertisement