dinamalar telegram
Advertisement

பாலியல் வழக்கு விசாரணை பெண் அதிகாரி ஆஜராக உத்தரவு

Share

விழுப்புரம் : முன்னாள் சிறப்பு டி.ஜி.பி., மீதான பாலியல் வழக்கில், பெண் ஐ.பி.எஸ்., அதிகாரி டிசம்பர் 1ம் தேதி ஆஜராக, விழுப்புரம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.




தமிழக முன்னாள் சிறப்பு டி.ஜி.பி., பாலியல் தொல்லை கொடுத்ததாக, பெண் ஐ.பி.எஸ்., அதிகாரி புகார் அளித்தார். இதையடுத்து, 'சஸ்பெண்ட்' செய்யப்பட்ட சிறப்பு டி.ஜி.பி., மீதும், பெண் அதிகாரியை மிரட்டி கார் சாவியை பறித்ததாக செங்கல்பட்டு முன்னாள் எஸ்.பி., கண்ணன் மீதும், விழுப்புரம் சி.பி.சி.ஐ.டி., போலீசார் நான்கு பிரிவுகளில் வழக்கு பதிந்தனர்.இவ்வழக்கு, விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

சாட்சிகள் விசாரணை கடந்த 11ம் தேதி துவங்கியது. முதல் சாட்சியான புகார்தாரர் பெண் ஐ.பி.எஸ்., அதிகாரி சாட்சியம் அளித்துள்ள நிலையில், மற்ற சாட்சிகள் விசாரணை நடக்கிறது.இந்த வழக்கில், சம்பவத்தன்று பெண் ஐ.பி.எஸ்., அதிகாரியின் வாகன டிரைவராக பணியில் இருந்த, தற்போது பெரம்பலுார் மாவட்டம், பாடாலுார் போலீஸ் நிலையத்தில் பணிபுரியும் பாலமுருகன் நான்காவது சாட்சியாக சேர்க்கப்பட்டிருந்தார். பெண் ஐ.பி.எஸ்., அதிகாரிக்கு வழி பாதுகாவலராக சென்ற, தற்போது பெரம்பலுார் ஆயுதப்படையில் பணிபுரியும் சந்திரசேகரன், ஐந்தாவது சாட்சியாக சேர்க்கப்பட்டிருந்தார்.

இவர்கள் இருவரும் நேற்று விழுப்புரம் நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்தனர். ''வரும் டிசம்பர் 1ம் தேதி பெண் ஐ.பி.எஸ்., அதிகாரி ஆஜராக வேண்டும். அன்று அவரிடம் சிறப்பு டி.ஜி.பி., தரப்பினர் குறுக்கு விசாரணை செய்யலாம்,'' என, நீதிபதி கோபிநாதன் உத்தரவிட்டார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement