dinamalar telegram
Advertisement

கனடா பயங்கரவாதிக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்

Share

புதுடில்லி : பாகிஸ்தானில் இருந்து ஆயுதங்கள், வெடி பொருட்கள் பெற்று, நம் நாட்டின் பல்வேறு இடங்களில் தாக்குதல் நடத்த சதித்திட்டம் தீட்டிய கனடாவை சேர்ந்த பயங்கரவாதி மீது என்.ஐ.ஏ., சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.



பஞ்சாப் மாநிலம் ஜலந்தரை சேர்ந்தவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார். இவர் வட அமெரிக்க நாடான கனடாவின் சர்ரே நகரில் வசித்து வருகிறார். இவர் பாபர் கல்சா என்ற தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பில் உள்ளார்.இந்த அமைப்பு நாட்டின் பல்வேறு பகுதிகளில் பயங்கர தாக்குதல் நடத்த சதி திட்டம் தீட்டிய வழக்கை என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்பு விசாரித்தது.

இதையடுத்து ஹர்தீப் சிங் நிஜ்ஜார் மீது யு.ஏ.பி.ஏ., உட்பட பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.இந்த வழக்கில் நிஜ்ஜார் மீது என்.ஐ.ஏ., சிறப்பு நீதிமன்றத்தில் அதிகாரிகள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.


அதன் விபரம்:

பல்வேறு பணப் பரிமாற்ற நிறுவனங்கள் மற்றும் ஹவாலா வாயிலாக கனடாவில் இருந்து இந்தியாவுக்கு நிஜ்ஜார் பணப் பரிமாற்றம் செய்துள்ளார். இதன் வாயிலாக பாக்.,கில் இருந்து ஆயுதங்கள், வெடி பொருட்கள் பெற்று பல்வேறு இடங்களில் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளார்.காலிஸ்தான் தனி நாடு கோரும், 'சிக்ஸ் பார் ஜஸ்டிஸ்' தீவிரவாதிகளுடன் இவருக்கு நெருங்கிய தொடர்பு உள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement