dinamalar telegram
Advertisement

இலக்கு தெரியாமல் பயணிக்கும் மாலுமி: சிதம்பரத்துக்கு அண்ணாமலை பதிலடி

Share
சென்னை: 'ஆயிரம் ஓட்டைகள் இருக்கக்கூடிய கப்பல் உங்கள் கட்சி; அதிலே தத்தளித்து, இலக்கு தெரியாமல் பயணிக்கும் மாலுமி நீங்கள்' என, முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் தெரிவித்த கருத்துக்கு, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை பதிலடி தந்துள்ளார்.

நகைச்சுவை



தமிழகத்தில் திருப்பூர், திருநெல்வேலி உட்பட நான்கு நகரங்களில் மாவட்ட பா.ஜ., அலுவலகத்தை, அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, திறந்து வைத்தார். இதையடுத்து, 'கட்சி எழும்புகிறதோ இல்லையோ; கட்டடங்கள் எழும்புகின்றன. நான்கு நகரங்களில், மாவட்ட கட்சியின் புதிய, பெருமதிப்புள்ள அலுவலக கட்டடங்களை, ஒரே நாளில் திறக்கும் கட்சிக்கு பாராட்டுகள்' என, காங்., முன்னாள் நிதியமைச்சர் சிதம்பரம் கருத்து தெரிவித்திருந்தார்.

இதற்கு பதிலளித்து, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை விடுத்த அறிக்கை: ஐயா, ஆயிரம் ஓட்டைகள் இருக்கக்கூடிய கப்பல் உங்கள் கட்சி. அதிலே தத்தளித்து, இலக்கு தெரியாமல் பயணிக்கும் மாலுமி நீங்கள். உங்களுடைய நகைச்சுவையை தாண்டி, நாங்கள் வளர்ந்து கொண்டிருக்கிறோம் என்று உங்களுக்கு தெரியும்; தங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தமிழக பா.ஜ., செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி அறிக்கை: ஊழல்கள் பல செய்து கட்டடங்களை எழுப்பியதால், சிறையில் இருக்க வேண்டிய நிலையில், பிணையில் இருந்து கட்சியை காலி செய்து, தொண்டர்களை நடு தெருவில் நிறுத்தியவர்கள் காங்., தலைவர்கள். விமர்சனம்இவர்கள், தொண்டர்களுக்காக பெருமதிப்புள்ள கட்டடங்களை அர்ப்பணிக்கும் தலைவர்கள் உள்ள கட்சியை விமர்சனம் செய்வதில் வியப்பில்லை.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (91)

  • P. SRINIVASALU - chennai,இந்தியா

    இவன் பேசறதை எல்லாம் கேட்டுகிட்டு...

  • Bhaskaran - Chennai,இந்தியா

    விரைவில் பசி திரிணாமுல் கட்சியில் ஐக்கியமாகி காணாமல் போக வாழ்த்துக்கள்

  • ராஜா -

    இலக்கோடு கொள்ளை அடித்து சேர்த்து வைத்துவிட்டு பேசுகிறார் இந்த களவாணி.

  • DARMHAR - Los Angeles,யூ.எஸ்.ஏ

    ப. சிதம்பரமா? அவரது தான்தோன்றி உளறல்களை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளக் கூடாது

  • J. G. Muthuraj - bangalore,இந்தியா

    'நாங்கள்' வளர்ந்து கொண்டிருக்கிறோம் என்றால் யார்?.....அதிகாரத்திலுள்ளவர்கள் வளர்கிறீர்கள்....மக்கள் வளர்ச்சி??? உச்சகட்ட வறுமையில் இருக்கும் நான்கு மாநிலங்களும், பிஜேபியினாலோ, பிஜேபியின் ஆதரவினாலோ ஆட்சி செய்யப்படுகின்றன .....

Advertisement