dinamalar telegram
Advertisement

காட்டாற்று வெள்ளத்தில் மாயமான தார் ரோடு

Share
Tamil News
கூடலுார்: காட்டாற்று வெள்ளத்தில் கூடலூர் கழுதைமேடு ரோடு முற்றிலும் சேதம் அடைந்ததால் விவசாயிகள் சிரமத்திற்கு உள்ளாகினர்.கூடலூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் உள்ள கழுதைமேடு புலத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் சாகுபடி நிலங்கள் உள்ளன. இப்பகுதியிலுள்ள விளை பொருட்களை ஏற்றி வருவதற்காக தம்மணம்பட்டியில் இருந்து கழுதை மேடு வரை 4 கி.மீ., தூரத்தில் தார்ரோடு அமைக்கப்பட்டது. சில நாட்களாக பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் கழுதைமேட்டிலிருந்து 18ம் கால்வாய் பாலம் வரை உள்ள தார்ரோடு அனைத்தும் முற்றிலும் சேதமடைந்து பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது விவசாயிகள் டூவீலரில் செல்ல முடியாமலும் விளை பொருட்களை கொண்டுவர முடியாமலும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். நிரந்தரமாக சீரமைப்பதற்கு முன்பு விவசாயிகள் சென்று வரும் வகையில் தற்காலிகமாக சீரமைக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement