dinamalar telegram
Advertisement

11லட்சம் விதை பந்து வழங்கி மரம் வளர்க்க மாணவர்கள் ஊக்குவிப்பு

Share
தேனி : பள்ளிகளில் பசுமையை உருவாக்கவும், மாணவர்கள் மரங்கள் வளர்த்து சுற்றுச்சூழலை பாதுகாக்கும் பணி குறித்து மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் (கல்வித்துறை) மகேஸ்வரன் கூறியதாவது:

சுற்றுச்சூழல் பாதுகாப்பில் பள்ளிகளின் பங்களிப்புபள்ளிகளில் மரக்கன்றுகள் கொடுத்து மரங்கள் வளர்க்க மாணவர்களை ஊக்குவிக்கிறோம். மாணவர்களுக்கான தேசிய பசுமை படை, சுற்றுச்சூழல் மன்றங்களை ஒருங்கிணைத்து பசுமை போர்வையை உருவாக்குகிறோம். மாவட்டத்தில் 940 பள்ளிகள் உள்ளன. இதில் 250 தேசிய பசுமை படைகள், 38 சுற்றுச்சூழல் மன்றங்கள் உள்ளன. இதில் 8 ஆயிரம் மாணவர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். 6 முதல் 10ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் இணையலாம். இதற்கு பொறுப்பாசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.பள்ளிகளில் புதிதாக துவங்க என்ன செய்ய வேண்டும்சி.இ.ஓ., அலுவலகத்திடம் பள்ளி அனுமதி பெற வேண்டும். தேசிய பசுமை படை, சுற்றுச்சூழல் மன்றங்களில் குறைந்தபட்சம் 25 மாணவர்கள இணைய வேண்டும்.பள்ளிகளில் மரம் வளர்ப்பு, மூலிகை, காய்கறி தோட்டம் அமைத்துள்ளோம். 2019ல் இருந்து இதுவரை 11 லட்சம் விதைப்பந்துகள் வழங்கி உள்ளோம்.


மரக்கன்று நட்டு வளர்க்கும் மாணவர் களுக்கு பரிசுகள் வழங்குகிறோம். உலக சுற்றுச்சூழல் தினத்தன்று 40 மாணவர்களுக்கு பரிசு வழங்கினோம். பசுமை படை பராமரிப்பு நிதியாக பள்ளி ஒன்றுக்கு ஆண்டுக்கு ரூ.5 ஆயிரம் வழங்கப்படுகிறது.அடர்குறுவன திட்டம் பற்றிதொண்டு நிறுவனங்களுடன் இணைந்து பள்ளிகளில் அடர்குறுவன திட்டத்தை செயல்படுத்தி வருகிறோம். பழம், நிழல் தரும் மரங்கள் வளர்க்க உதவி வருகிறோம். இது மாணவர்களின் தாவரவியல் பாடத்துக்கும் உதவியாக இருக்கும்.

எத்தனை பள்ளிகளில் அவர் குறுவனம் உள்ளதுசில்வார்பட்டி அரசு மாதிரி மேல்நிலை பள்ளி, ஏ.வாடிப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி, வயல்பட்டி காந்திஜி நடுநிலைபள்ளி ஆகியவற்றில் அடர் குறுவன திட்டம் உள்ளது. வெள்ளையம்மாள்புரம் அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளியில் துவங்க உள்ளோம்.தொடர்பிற்கு: நேரிடையாக முதன்மை கல்வி அலுவலகம் வரலாம். அல்லது 99420 89443 எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்றார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement