dinamalar telegram
Advertisement

ஆண்டிபட்டி - தெப்பம்பட்டி ரோடு  சந்திப்பில் சிக்னல்

Share
ஆண்டிபட்டி : ஆண்டிபட்டி - தெப்பம்பட்டி ரோடு சந்திப்பில் 'சிக்னல்' அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

50க்கும் மேற்பட்ட கிராமங்களை கடந்து வரும் வேலப்பர் கோயில் ரோடு ஆண்டிபட்டியில் சந்திக்கும் இடத்தில் அடிக்கடி போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. தேசிய நெடுஞ்சாலையுடன் இணையும் இந்த இடம் தற்போது மூன்று வழிப்பாதையாக உள்ளது. வாகனங்கள் திரும்பும் இடத்தில் தனியார் வாகனங்கள், ஆட்டோக்களை நிறுத்தி இடையூறு செய்கின்றனர். சமீபத்தில் இப்பகுதியில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்த போலீஸ் கூண்டு அமைக்கப்பட்டு மைக் மூலம் விதி மீறும் வாகனங்களுக்கு எச்சரிக்கை விடப்படுகிறது. வாகனங்கள் இப்பகுதியில் நின்று செல்ல சிக்னல் வசதி ஏற்படுத்த வேண்டும்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement