dinamalar telegram
Advertisement

தோட்டக்கலை பயிர்களுக்கு காப்பீடு செய்ய அழைப்பு

Share
தேனி: பிரதமர் பயிர் காப்பீட்டு திட்டத்தில் 2021-2022 ராபி பருவ தோட்டக்கலை பயிர்களுக்கு காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் அறிவிக்கை செய்யப்பட்ட 27 தொகுப்பு கிராம விவசாயிகள் 2022 ஜன.,1க்குள் கொத்த மல்லி ஏக்கருக்கு ரூ.615, ஜன.,31க்குள் கத்தரிக்கு ரூ.1142.50, முட்டைகோசுக்கு ரூ.1170 பிரிமியம் செலுத்தலாம்.2022 பிப்.28க்குள் தக்காளி ஏக்கருக்கு ரூ.840, வாழை ஏக்கருக்கு ரூ.3250 பிரிமியம் கட்டலாம்.
விவசாயிகள் விண்ணப்ப பதிவு கட்டணம், சிட்டா, அடங்கல், வங்கி கணக்கு புத்தகம், ஆதார் நகலுடன் தேசிய, தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகள் அல்லது பொதுசேவை மையங்களுக்கு சென்று காப்பீடு பெறலாம் என கலெக்டர் முரளீதரன் கூறியுள்ளார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement