dinamalar telegram
Advertisement

ஓடையில் தேங்கும் கழிவுநீர்; தூர்வார வலியுறுத்தல்

Share
ஆண்டிபட்டி : ஆண்டிபட்டி வாரச்சந்தையை ஒட்டிச்செல்லும் ஓடையை துார்வார பொதுப்பணித்துறை, பேரூராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நக்கலக்கரடு மலைப்பகுதியில் இருந்து வரும் மழைநீர் ஆண்டிபட்டி - ஏத்தக்கோயில் ரோட்டை ஒட்டி உள்ள இந்த ஓடையில் சேர்கிறது. ஆண்டிபட்டியில் ரயில்வே ரோடு, வாரச்சந்தை, நகர் பகுதி வழியாக பல கிராமங்களை கடந்து வைகை ஆற்றில் சேர்கிறது. ஆண்டிபட்டி பாலாஜி நகர், காமராஜர் நகர் குடியிருப்புகளில் இருந்து வரும் கழிவுநீரை தற்போது இந்த ஓடையில் சேர்த்துள்ளனர். மழைநீர், கழிவுநீர் ஓடையில் பல இடங்களில் தேங்கி விடுகிறது. ஆண்டிபட்டி ரயில்வே ரோட்டை கடந்தபின் ஓடை புதர்மண்டி உள்ளது. பல ஆண்டுகளாக ஓடையின் இப்பகுதி துார்வாரவில்லை. இதனால் அதிகளவு நீர் ஓடையில் வரும்போது திசைமாறி ரோட்டில் தேங்கி பாதிப்பு ஏற்படுகிறது. ஓடையை துார்வாரி தேங்கும் கழிவுநீரை அகற்ற மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement