dinamalar telegram
Advertisement

சொந்த நிதியில் வாய்க்கால் சீரமைக்கும் விவசாயிகள்

Share
போடி : சிலமலை சப்பானி குளத்தில் இருந்துவடத்தான் குளத்திற்கு வரத்து கால்வாயை விவசாயிகள் சொந்த நிதியில் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.


போடி, சிலமலையில் 20 ஏக்கரிலானது வடத்தான்குளம். மழைநீர் பொட்டிப்புரம் காமராஜ் தாயாள சமுத்திர குளத்திலிருந்து வரும் உபரி நீர் ராசிங்காபுரம் கால்வாய் வழியாக வடத்தான் குளத்தில் சேரும். இதில் நீர் நிரம்புவதால் 300 ஏக்கர் பயன்பெறும். வடத்தான்குளத்திற்கு நீர் வரும்கால்வாய் ஆக்கிரமிப்பால் நீர்வரத்தின்றி விவசாயிகள் சிரமம் அடைந்தனர். 18ம் கால்வாய் திட்டத்திலும் இக்குளம் விடுபட்டதால் நீர் வரத்து இன்றி தவித்தனர்.

பொதுப்பணித்துறையினரிடம் கோரிக்கை வைத்தும் பலன் இல்லை. சிலமலை கிராமத்தலைவர்ரவி தலைமையில் ஓய்வு பெற்ற ஆசிரியர் லட்சுமணராஜ், ராசிங்காரபுரம் விவசாயிகள்ஒருங்கிணைப்பாளர் கண்ணன் உட்படஇப்பகுதி விவசாயிகள் ஒன்றிணைந்து தங்களது சொந்த நிதியிலும், மண் அள்ளும் இயந்திரம் மூலம் சப்பானி குளத்திலிருந்து வடக்கத்தான்குளம் வரை உள்ளஆக்கிரமிப்பு அகற்றி, கால்வாய் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement