dinamalar telegram
Advertisement

பட்டு நுாற்பாலைக்கு பூமிபூஜை

Share
தேனி : தேனி தப்புக்குண்டில் ஐந்தரை ஏக்கரில் ரூ.2.67 கோடியில் தானியங்கி பட்டு நுாற்பாலைக்கு பூமிபூஜை நடந்தது.

மாவட்டத்தில் 270 விவசாயிகள் 'மல்பெரி' சாகுபடி செய்கின்றனர். இங்கு நுாற்பாலை அமைக்க கோரினர். பிரதமரின் 'ஒரு மாவட்டம் ஒரு பொருள்' திட்டத்தில் பட்டு வளர்ச்சி மாவட்டமாக தேனி அறிவிக்கப்பட்டது. பட்டுவளர்ச்சித் துறையின் தொழில்நுட்ப உதவியுடன், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி அளிப்புத் திட்டத்தில் ரூ.2.67 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. இதற்காக தப்புக்குண்டில் உள்ள ஐந்தரை ஏக்கர் அரசு நிலத்தில், மாநிலத்தின் 2வது பட்டு நுாற்பு ஆலைக்கான பூமிபூஜை நேற்று நடந்தது. பட்டுவளர்ச்சித்துறை உதவி இயக்குனர் கணபதி, திட்ட இயக்குனர் தண்டபாணி, கோட்டூர் ஊராட்சித் தலைவர் முத்துவேல், பி.டி.ஓ., சந்திரசேகர் பங்கேற்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement