dinamalar telegram
Advertisement

சாகுபடியில் ஏல விவசாயிகள் ஆர்வம்

Share
கம்பம் : அதிக வருவாய் தருவதால் ஏல தோட்டங்களில் மிளகு ஊடு பயிராக சாகுபடி செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

வாசனை திரவிய பொருட்களில் மிளகு முக்கியமானது. பல மாநிலங்களில் மிளகு சாகுபடி செய்தாலும் இடுக்கி மிளகிற்கு தனி மவுசு உண்டு.ஏலக்காய், தேயிலை, காபி தோட்டங்களில் மிளகை ஊடுபயிராக சாகுபடி செய்கின்றனர். ஏலத்தோட்டங்களில் நிழல் தரும் மரங்களின் மேல் கொடிகளை படரவிடுகின்றனர். இடுக்கி மாவட்டத்தில் ஒவ்வொரு வீட்டிலும், வீட்டை சுற்றி மிளகு சாகுபடியை காணலாம். 3 ஆண்டுகளில் பலன்தரும் எக்டேருக்கு 360 கிலோ மகசூல் கிடைக்கும்.20 ஆண்டுகள் பலன்தேசிய தோட்டக்கலை இயக்கம் சார்பில் 2009 ல் இடுக்கி மாவட்டத்தில் மிளகு சாகுபடி மேம்பாட்டிற்கென ரூ. 120 கோடியில் திட்டம் செயல்படுத்தப்பட்டது.


அதற்கு பின எக்டேருக்கு 700 டன் மகசூல் பெறுகின்றனர். பெரும்பாலும் எத்தனை ஆண்டுகளானாலும் மிளகு கெட்டுப்போகாது. மருத்துவ குணம் கொண்டது, மிளகை இருப்பு வைத்து விற்பனை செய்யலாம். கொடியிலிருந்து 20 ஆண்டுகள் வரை பலன் கிடைக்கும்.தொழில்நுட்ப ஆலோசகர் அன்பழகன், 'அதிக காரத்தன்மை கொண்ட இடுக்கி மிளகிற்கு மார்க்கெட்டில் தனி மவுசு உண்டு. நல்ல விலை கிடைப்பதால், ஏலத்தோட்டங்களில் ஊடுபயிராகவும், இடுக்கி யில் வீடுதோறும் மிளகு சாகுபடியாகிறது ' என்றார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement