dinamalar telegram
Advertisement

மாநில எல்லையில் காற்றாலை உற்பத்திக்கு வாய்ப்பு

Share
கம்பம் : மாநில எல்லையோரம் உள்ள மலையடிவாரங்களில் காற்றாலை மின் உற்பத்தி செய்ய அதிக வாய்ப்பு உள்ளதால் தமிழக மின்வாரியம் ஆர்வம் காட்ட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

தேனி மாவட்டத்தில் பெரியாறு நீர் மின்நிலையம், சுருளியாறு,வைகை நீர்மின்நிலையங்கள், மைக்ரோ பவர் ஸ்டேஷன்கள் உள்ளன. அணையில் போதிய அளவு நீர் இருப்பு இல்லாத கோடை காலங்களில் இங்கு மின் உற்பத்தி நடக்காது. ஆனால் கோடையில் மின்தேவை அதிகரிக்கும். இந்த காலங்களில் மின்தேவையை பூர்த்தி செய்ய காற்றாலை மின்சாரம் பயன்படுகிறது.


தேனி மாவட்டத்தில் கடமலைக்குண்டு, ஆண்டிபட்டி, போடி, பெரியகுளம் தாலுகாக்களில் பரவலாக காற்றாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. அனைத்தும் தனியாருக்கு சொந்தமானது. அவர்களிடமிருந்து வாரியம் மின்சாரத்தை கொள்முதல் செய்கிறது.கேரளா ஆர்வம்:கேரளாவில் இடுக்கி மாவட்டத்தில் இருமாநில எல்லையோரம் அதிக எண்ணிக்கையில் காற்றாலைகளை கேரள மின்வாரியம் நிறுவி, மின் உற்பத்தி செய்கிறது. ராமக்கல்மெட்டு பகுதியில் குதிரைபாஞ்சான் என்ற இடத்தில் அதிக காற்றாலைகள் அமைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மின்வாரியத்திற்கும் காற்றாலை மின் உற்பத்திக்கு தகுதியான இடங்கள் நிறைய உள்ளன. கோம்பை, பண்ணைப்புரம், தேவாரம் பகுதி மலையடிவாரங்களிலும் காற்றாலைகள் அமைத்து மின் உற்பத்தி செய்ய தமிழக மின்வாரியம் முன்வர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement