dinamalar telegram
Advertisement

மண் பரிசோதனையில் அதிக விளைச்சல்; வேளாண் இணை இயக்குனர் தகவல்

Share
தேனி : மண் பரிசோதனையில் அதிக விளைச்சல் பெறலாம் என வேளாண் இணை இயக்குனர் விஷ்ணுராம் மேத்தி கூறியுள்ளார்.

அவர் கூறியுள்ளதாவது:மாவட்டத்தில் 4000 மண்மாதிரிகள் சேகரித்து மண் ஆய்வு ஆய்வுக்கு பின் மண்வள அட்டைகள் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட தரிசு நில குழுக்களில் உள்ள 601 விவவசாயிகளுக்கும் மண்மாதிரிகள் எடுக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.மண் வள அட்டை மூலம் மண் சத்துகளான தழை, மணி, சாம்பல், கால்சியம், மெக்னீசியம், சல்பர், இரும்பு, மாங்கனீசு, துத்தநாகம், தாமிரம், போரான், அமிலத்தன்மை, மண்ணின் நயம், சுண்ணாம்பு நிலையை அறிந்து கொள்ளலாம். குறைகளுக்கு ஏற்ப உரமிட்டு செலவை குறைத்து, அதிக விளைச்சல் பெறலாம்.விவசாயிகள் தேனி மண் பரிசோதனை நிலையத்தில் தலா ரூ.20 செலுத்தி மண் மாதிரி, பாசன நீர் பரிசோதனை செய்யலாம். சந்தேகங்களுக்கு வேளாண் உதவி இயக்குனர் அலுவலகம், மண் பரிசோதனை நிலையத்தை 94433 18717 தொடர்பு கொள்ளலாம். என்றார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement