dinamalar telegram
Advertisement

தக்காளியை ரூ.50க்கு விற்க தயார் : வியாபாரிகள் சங்கம்

Share
சென்னை : 'சென்னை கோயம்பேடு சந்தையில், தக்காளியை ஏற்றி, இறக்க வசதியாக, திறந்தவெளி இடத்தை பயன்படுத்த அனுமதித்தால், விலை குறையும்' என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.


@கோயம்பேடு மொத்த காய்கறி சந்தையில், தக்காளியை ஏற்றி, இறக்க வசதியாக, அங்குள்ள திறந்தவெளி இடத்தை தொடர்ந்து பயன்படுத்த அனுமதிக்கக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், தந்தை பெரியார் தக்காளி வியாபாரிகள் சங்கத் தலைவர் சுவாமிநாதன் வழக்கு தொடர்ந்திருந்தார்.இந்த வழக்கை உடனடியாக விசாரிக்கக் கோரி, உயர் நீதிமன்ற நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் முன் வழக்கறிஞர் சிவா ஆஜராகி முறையிட்டதாவது:

கோயம்பேடு சந்தையில், 86 சென்ட் இடத்தில், தக்காளி ஏற்றி வரும் லாரிகள் நிறுத்தப்பட்டு, லோடு இறக்கப்படும். கொரோனா ஊரடங்கு தளர்வுக்கு பின், சந்தை திறக்கப்பட்டாலும்,இந்த இடத்தை இன்னும் அரசு திறக்கவில்லை. இதனால், வெளிமாநிலங்களில் இருந்து தக்காளி ஏற்றி வரும் வாகனங்கள், கோயம்பேடு சந்தைக்கு வருவதில்லை.தக்காளி விலை உயர, இதுவும் காரணம். இந்த இடத்தை திறந்தால், மற்ற மாநிலங்களில் இருந்து தக்காளி ஏற்றி வரும் லாரிகளை இங்கு நிறுத்தி, லோடு இறக்க முடியும். இதனால், தக்காளி விலையும் குறையும். தக்காளி கிலோ 40 முதல் 50 ரூபாய் வரை விற்பனை செய்ய, சங்கம் தயாராக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement