கமிஷனர் அழைப்பு
திண்டுக்கல்: திண்டுக்கல் மாநகராட்சிக்கு சொந்தமான உரக்கிடங்கில் ஏற்கனவே உள்ள கழிவுகளில் 2 லட்சம் கன மீட்டர் கழிவுகளை அகற்றும் பணி நடக்கிறது.கூடுதலாக 50 ஆயிரம் டன் திடக்கழிவுகள் இருப்பில் உள்ளது. இக்கழிவுகளை மறு சுழற்சிக்கோ, உரம் தயாரிக்கவோ எடுத்துக்கொள்ள விரும்பும் நிறுவனங்கள் டிச.2 க்குள் விண்ணப்பிக்கலாம். விவரங்களுக்கு மாநகராட்சி பொது சுகாதாரத் துறையை அணுகலாம் என, கமிஷனர் சிவசுப்பிரமணியன் தெரிவித்தார்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!