dinamalar telegram
Advertisement

கல்லுாரியில் இருந்து விலகிய மாணவர்கள்

Share
திண்டுக்கல் : திண்டுக்கல் சுரபி நர்சிங் கல்லுாரியில் பயின்ற மாணவர்கள் ஏராளமானோர் கல்லுாரியில் இருந்து விலகினர்.

திண்டுக்கல் அருகே முத்தனம்பட்டியில் சுரபி நர்சிங் கல்லுாரி இயங்கி வருகிறது. மாணவியருக்கு தாளாளர் ஜோதிமுருகன் பாலியல் தொந்தரவு கொடுத்ததாகவும், இதற்கு விடுதி வார்டன் அர்ச்சனா உடந்தையாக இருந்ததாக புகார்கள் வந்தன.இதையடுத்து கல்லுாரிக்கு தற்காலிமாக 'சீல்' வைக்கப்பட்டது. தாடிக்கொம்பு போலீசார் இருவரின் மீது போக்சோவில் வழக்கு பதிவு செய்து, விடுதி வார்டன் அர்ச்சனாவை கைது செய்தனர்.

தலைமறைவாக இருந்த தாளாளர் ஜோதிமுருகன் நேற்று முன்தினம் திருவண்ணாமலை போளூர் கோர்ட்டில் சரணடைந்தார். நேற்று இக்கல்லுாரியில் பயிலும் மாணவர்கள் தங்கள் சொந்த விருப்பத்தின் பேரில் சான்றிதழை பெற்று கல்லுாரியில் இருந்து விலகினர். முதலாமாண்டு மாணவர்கள், ஏற்கனவே படித்து முடித்தவர்கள் உட்பட 190 பேர் கல்வி சான்றிதழைப் பெற்றுச் சென்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement