dinamalar telegram
Advertisement

நான்கு வழிச்சாலையில் பாலம் அமைக்க மறியல்

Share
நத்தம் : -நத்தம் அருகே புதிதாக அமைக்கப்படும் நான்கு வழிச்சாலையில் சேர்வீடு பகுதியில் பாலம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்

.நத்தம் அருகே வேலம்பட்டியில் உள்ளது சேர்வீடு கிராமம். இந்த கிராமத்திற்கான விலக்குப் பாதை நத்தம் - திண்டுக்கல் ரோட்டில் உள்ளது.தற்போது நத்தம் - துவரங்குறிச்சி நான்கு வழிச்சாலை பணி நடக்கிறது. இந்த சாலை சேர்வீடு கிராமத்திற்குள் செல்லும் ரோட்டின் குறுக்கே அமைக்கப்பட்டு பணிகள் நடந்து வருகிறது.இக்கிராமத்தினர் தங்கள் பாதுகாப்புக்காக, நான்கு வழிச்சாலையில் பெரிய பாலம் அமைக்க மனு செய்துள்ளனர். ஆனால் சிறிய பாலம் அமைக்கப்படுகிறது. இதனால் அவர்கள் நத்தம் - சேர்வீடு ரோட்டில் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.கிராம நிர்வாக அலுவலர் சுரேந்தர் மற்றும் போலீசார், இது குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளிக்குமாறு கூறியதால் கலைந்தனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement