dinamalar telegram
Advertisement

பிளாஸ்டிக் தயாரிப்போரை பிடிச்சு கொடுத்தா வெகுமதி

Share
திண்டுக்கல்: 'தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் தயாரிக்கும் தொழிற்சாலை பற்றி தகவல் தெரிவித்தால் வெகுமதி வழங்கப்படும்' என, கலெக்டர் விசாகன் தெரிவித்தார்.அவர் தெரிவித்தது: தமிழகத்தில் ஒரு முறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இருந்தும் சில உற்பத்தி யாளர்கள் அரசு துறைகளிடம் அனுமதி பெறாமல் தற்காலிக மாக செயல்படுகின்றனர்.
சுற்றுச்சூழல் மீது அக்கறை கொண்ட பொதுமக்கள், பிளாஸ்டிக் தயாரிப்பு நிறுவனங்களுக்கு அருகில் வசிப்பவர்கள், சட்ட விரோதமாக இயங்கும் அத்தொழிற்சாலைகள் குறித்து மாசு கட்டுப்பாடு வாரியத்திற்கு தகவல் தெரிவிக்கலாம்.
http://tnpcb.gov.in/contact.php ல் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் தொடர்பு விபரங்கள் உள்ளன. புகார்களை இ மெயில், கடிதம், அலைபேசி, வாட்ஸ்ஆப்பில் தெரிவிக்கலாம்.புகார் அளிப்போர் தங்கள் பெயர், முகவரி, அலைபேசி எண்ணை அளிக்க வேண்டும். அவர்களின் ரகசியம் பாதுகாக்கப்படும். பிளாஸ்டிக்கை ஒழிப்பதில் பங்களிக்கும் பொதுமக்களுக்கு வெகுமதி வழங்கப்படும், என்றார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement