dinamalar telegram
Advertisement

விவசாய மின் இணைப்பு வழங்குதல்; பதிவு செய்தவர்களுக்கு முன்னுரிமை

Share
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் சாதாரண மற்றும் சுயநிதி திட்டத்தில் விவசாய மின் இணைப்பு கோரி பதிவு செய்த விண்ணப்பதாரர்களுக்கு மின் இணைப்பு வழங்கும் பணி துவங்கியுள்ளது.

2003 முதல் 2006 வரை சாதாரண முன்னுரிமை, சுயநிதி திட்டத்தில் ரூ.25 ஆயிரம், ரூ.50 ஆயிரம் திட்டத்தில் 2012 வரை விவசாய மின் இணைப்பை பதிவு செய்துள்ள விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படுகின்றன.விண்ணப்பதாரர்களுக்கு வருவாய் ஆவணங்கள், தயார் நிலையை பதிவு செய்ய கோரி அறிவிப்பு கடிதம் அந்தந்த பகுதி செயற்பொறியாளர்கள் மூலம் தபாலில் அனுப்பப்பட்டு உள்ளது.


உரிய வருவாய் ஆவணங்களை குறிப்பிட்ட பிரிவு அலுவலகத்தில் கொடுத்து தங்களது தயார் நிலையை பதிவு செய்யலாம். தயார் நிலை முன்னுரிமை அடிப்படையில் மின் இணைப்பு வழங்கப்படும்.

தட்கல் மின்இணைப்பு:2006, 2007 ல் சாதாரண முன்னுரிமை பதிவு செய்துள்ள விண்ணப்பதாரர்கள் ரூ.10 ஆயிரம், சுயநிதி திட்டத்தில் இணைய கடிதம், வருவாய் ஆவணங்களுடன் ரூ.500 செலுத்தி செயற்பொறியாளர் அலுவலகத்தில் பதிவு செய்யலாம்.விரைவு (தட்கல்) மின் இணைப்பு வழங்கும் திட்டத்தில் 5 குதிரை திறன் மின் மோட்டார்களுக்கு ரூ.2.50 லட்சம், 7.5 குதிரைத்திறன் ரூ.2.75 லட்சம், 10 குதிரைத்திறன் ரூ.3 லட்சம், 15 குதிரைத்திறன் ரூ.4 லட்சம் வீதம் ஒருமுறை கட்டணம் செலுத்தும் விண்ணப்பதாரர்கள் இலவச மின் இணைப்பு பெற வருவாய் ஆவணங்களுடன் செயற்பொறியாளரிடம் பணம் செலுத்தி பயனடையலாம்.

மேற்கண்ட தொகையை 'மேற்பார்வை பொறியாளர், திண்டுக்கல் மின்பகிர்மான வட்டம், திண்டுக்கல்' எனும் பெயரில் வங்கி வரைவோலையாக செலுத்த வேண்டும்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement