dinamalar telegram
Advertisement

மின்கம்பங்களில் தீப்பொறிஅச்சத்துடன் வாழும் மக்கள்

Share
வடமதுரை: வடமதுரை அருகே முத்தனங்கோட்டையில் மின்கம்பங்களில் ஏற்பட்ட தீப்பொறியால் மக்கள் அச்சமடைந்தனர்.இங்குள்ள நுாற்பாலைக்கு தாமரைப்பாடி துணை மின்நிலையத்தில் இருந்து உயரழுத்த மின்சப்ளை வழங்கப்படுகிறது. நான்கு வழிச்சாலையை மின்ஒயர்கள் கடக்கும் பகுதியில் இருந்த இருகம்பங்கள் மாற்றப்பட்டு, உயரமான இரும்பு சட்டங்களாலான மின்கம்பங்கள் சமீபத்தில் நிறுவப்பட்டது. இதன் பின்னர் மின்கம்பங்களில் தீப்பொறிகள் கிளம்புவதாக மின் ஊழியர்களிடம் புகார் தெரிவித்தும் தீர்வு கிடைக்கவில்லை.
நேற்று காலை அடுத்தடுத்து சில மின்கம்பங்களில் தொடர்ந்து தீப்பொறிகள் பறந்தன. அருகிலிருந்த கடையின் மின்மீட்டர் பெட்டியிலும் பாதிப்பு ஏற்பட்டது. புதிய இரும்பு மின்கம்பத்தில் கட்டியிலிருந்த கேபிள் 'டிவி' ஒயர்கள் துண்டாகின. மின்வாரியத்திற்கு தகவல் தெரிவித்து சப்ளை நிறுத்தப்பட்டது. விபத்து அச்சத்தால் பொதுமக்கள் அப்பகுதியில் போராட்டத்திற்கு தயாராகினர். வடமதுரை இன்ஸ்பெக்டர் தெய்வம், உதவி செயற்பொறியாளர் முருகேசன், சரிசெய்ய உறுதியளித்ததால் மக்கள் கலைந்தனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement