dinamalar telegram
Advertisement

அரசு ஊழியர்கள் வலியுறுத்தல்

Share
மதுரை: கொரோனா தடுப்பூசி வீடு வீடாக சென்று போடும் அரசு முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என மதுரையில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.சங்க மாநில பொது செயலாளர் செல்வம் கூறியதாவது: வீடு வீடாக சென்று செவிலியர்கள் தடுப்பூசி போடுவதில் பல்வேறு சிரமங்கள் உள்ளன. பெண் ஊழியர்கள் தனியாக செல்ல வேண்டிய ஒரு நிலையுள்ளதால் பாதுகாப்பற்ற நிலை ஏற்பட்டுள்ளது. இப்பணியில் பெரும்பாலான ஊழியர்கள் ஈடுபட்டுள்ளதால் பிரதான பணியான தாய்சேய் நலப்பணிகள், கர்ப்பிணிகள், குழந்தைகள் பாதிக்கப்படும் நிலையுள்ளது. வீடு வீடாக சென்று தடுப்பூசி போட நிர்பந்திக்க கூடாது என்றார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement