dinamalar telegram
Advertisement

பத்து நாட்களாக வரல பஸ்கள்; சிரமத்தில் வ.புதுப்பட்டி மக்கள்

Share
வத்ராயிருப்பு : வத்திராயிருப்பு புதுப்பட்டியில் 10 நாட்களாக பஸ்கள் வராததால் அப்பகுதி மக்கள், மாணவர்கள், தொழிலாளர்கள் மிகுந்த சிரமத்தை சந்திக்கின்றனர்.

10 நாட்களுக்கு முன்பு கிறிஸ்தியான்பேட்டையை சேர்ந்த வாலிபர் கொலை செய்யப்பட்டார். இதன் பதட்டத்தால் ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து புதுப்பட்டி செல்லும் அனைத்து அரசு, தனியார் பஸ்களும் நிறுத்தப்பட்டன. அதன்பின் இன்று வரை பஸ்கள் இயக்கப்பட வில்லை. வெளியூர் வேலைக்கு செல்லும் கூலித் தொழிலாளர்கள், பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள், மருத்துவமனை செல்லும் நோயாளிகள் தினமும் சிரமத்தை சந்திக்கின்றனர்.டூவீலர்களில் லிப்ட் கேட்டும், ஆட்டோக்களில் கூடுதல் கட்டணம் கொடுத்தும், வசதியில்லாதவர்கள் 2 கிலோமீட்டர் நடந்து கோபாலபுரம் வந்து வெளியூர்களுக்கு பயணித்து வருகின்றனர்.

இந்நிலையில் பஸ்களை இயக்க வருவாய் , போலீஸ் நிர்வாகம் எவ்வித நடவடிக்கை எடுக்காததால் மாவட்ட நிர்வாகத்தின் செயல்பாடுகள் மீது புதுபட்டி பொதுமக்கள் அதிருப்தியில் உள்ளனர். தகுந்த போலீஸ் பாதுகாப்புடன் வழக்கம் போல் பஸ்கள் இயக்க கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement