dinamalar telegram
Advertisement

விருதுநகர் மாவட்டத்தில் செப்டிக்டேங்க் கழிவு சுத்திகரிப்பு நிலையம் தயார்

Share
மாசுகட்டுப்பாட்டு வாரியத்தின் நோக்கம்நீர், நிலம், காற்று, ஒலி மாசுபடுவதை கட்டுபடுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்டது மாசுகட்டுப்பாட்டு வாரியம். மாசு ஏற்படுத்தும் தனி நபர்கள், தொழிற்சாலைகள் உள்ளாட்சி, நகராட்சி என அனைவரையும் கண்காணித்து மாசுபடுதலை கட்டுபடுத்துவது தான் எங்கள் நோக்கம்.மாசுகட்டுபாட்டு வாரியத்தின் பணிகள்நீர் நிலைகள், காற்று மாசுபடுவதை தடுக்க கட்டுப்படுத்திட பாதுகாப்புடன் கூடிய செயலாக்கத்தினை திட்டமிடுதல், செயல்படுத்துதல், மாசுபாடு குறித்த தகவல்களை திரட்டுதல், அதை அரசுக்கு தெரியபடுத்துதல், மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துதல், தொழிற்சாலைகளுக்கு இசைவாணை வழங்குதல் போன்ற பல பணிகளை மேற்கொள்கிறோம்.ஆலைகளில் வகைப்படுத்தும் சிவப்பு, ஆரஞ்சு, பச்சை என்றால் என்னபயன்படுத்தும் பொருட்கள், வெளியேற்றும் கழிவுகள் அடிப்படையில் தொழிற்சாலைகள் சிவப்பு, ஆரஞ்சு, பச்சை என மூன்று வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளது. பட்டாசு, சாயபட்டறை, இயந்திர உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள், கழிவுகளை கையாளும் தொழிற்சாலைகள் சிவப்பு, சிறிய தொழிற்சாலைகள், நுாற்பாலைகள் ஆரஞ்சு, பிற தொழிற்சாலைகள் பச்சை என வகைபடுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு வகைப்படுத்தப்பட்ட தொழிற்சாலைகள் அரசின் வழிமுறைகளை முறையாக பின்பற்றுகிறதா என நிறத்தின் வகையை பொறுத்து குறிப்பிட்ட இடைவெளியில் சோதனை செய்கிறோம்.இசைவாணை பெற வேண்டியதன் முக்கியத்துவம்கழிவுகளை வெளியேற்ற கூடிய தொழிற்சாலைகள், கழிவுகளை சுத்திகரிக்க கூடிய தொழிற்சாலைகள், அதிக அளவு நீர் பயன்படுத்தகூடிய தொழிற்சாலைகள் மாசுகட்டுப்பாட்டு வாரியத்தின் இசைவாணையை பெற வேண்டும். இசைவாணையை பெறுவதன் மூலம் அரசின் விதிமுறைகள் பின்பற்றபடுவதோடு தொழிற்சாலைகளால் ஏற்படும் மாசின் அளவும் கண்காணிக்கப்பட்டு கட்டுபடுத்துவதற்கான வழிமுறைகள் வழங்கப்படும். இதன் மூலம் தொழிற்சாலைகள் பாதுகாப்பாக இயங்குவது உறுதி செய்யப்படும். விருதுநகர் மாவட்டத்தில் 1609 தொழிற்சாலைகள் மாசுகட்டுப்பாட்டு வாரியத்தின் இசைவாணையை பெற்று இயங்கி வருகின்றன.கழிவுகள் சுத்திகரிப்பு ஆலைகள் விருதுநகரில் செயல்படுகிறதாவிருதுநகர் மாவட்டத்தில் திருச்சுழி அருகே ராம்கி எனர்ஜி அண்ட் என்விரான்மென்ட் லிமிடெட் எனும் தனியார் நிறுவனம் 2006 முதல் இயங்கி வருகிறது. இந்நிறுவனம் விருதுநகர், ராமநாதபுரம், மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் இயங்கும் 353 அரசு மருத்துவமனைகள், 1736 தனியார் மருத்துவமனைகளில் இருந்து வெளியேறும் மருத்துவக் கழிவுகளை சுத்திகரிக்கும் பணியை மேற்கொள்கிறது.கழிவுகளை சுத்திகரிக்கும் அரசு நிறுவனம் உள்ளதாதிருச்சுழி உண்டுருமிகிடாக்குளத்தில் தமிழ்நாடு வேஸ்ட் மேனேஜ்மென்ட் லிமிடெட் எனும் அரசு நிறுவனம் இயங்கி வருகிறது. இது திடக்கழிவுகளை சுத்திகரிக்கிறது. இந்நிறுவனம் இதுவரை 89,948 டன் திடக்கழிவுகளை சுத்திகரித்து அப்புறப்படுத்தி உள்ளது.திறந்தவெளியில் கழிவுகள் கொட்டுவதை தடுக்க நடவடிக்கைதிறந்தவெளியில் கழிவுகள் கொட்டாமல் தடுப்பது ஊராட்சி, நகராட்சி நிர்வாகங்களின் பணி. திறந்த வெளிகளில் செப்டிக்டேங்க் வண்டிகள் கழிவுகளை கொட்டி செல்வது, கட்டட கழிவுகளை கொட்டுவது குறித்து 04562 252 442 ல் புகார் தெரிவிக்கலாம். தவறு செய்தது தனி மனிதனாக இருந்தாலும் உள்ளாட்சி, நகராட்சி நிர்வாகமாக இருந்தாலும் விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும். தொழிற்சாலைகள் அனுமதிக்கப்பட்டதை விட அதிக அளவு கழிவுகளை, மாசினை வெளியிடுவது கண்டறியப்பட்டால் மின்சார வாரியத்திடம் பரிந்துரை செய்யப்பட்டு மின்சாரம் துண்டிக்கப்படும். இதோடு வருவாய் துறையிடமும் பரிந்துரைத்து நடவடிக்கை எடுக்கப்படும்.செப்டிக்டேங்க் கழிவுகளை சுத்திகரிக்க வழிகள் உள்ளதாசெப்டிக்டேங்க் கழிவுகளை சுத்திகரிப்பதற்கு சுத்திகரிப்பு நிலையங்கள் உள்ளன. அதை நகராட்சி நிர்வாகங்கள் அமைத்து வருகின்றன. அருப்புக்கோட்டையில் செப்டிக்டேங்க் கழிவு சுத்திகரிப்பு நிலையம் பணிகள் முடிந்து இயக்கத்திற்கு தயாராகி வருகிறது. சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்துாரிலும் பணிகள் நடந்து வருகிறது.சுத்திகரிப்பு நிலையங்கள் இயக்கம் துவங்கிய பின் செப்டிக்டேங்க் கழிவுகள் திறந்த வெளியில் கொட்டப்படாமல் முறையாக சுத்திகரிக்கப்படும்.இப்பணிகள் முறையாக நடக்கிறதா என கண்காணிக்கும் பணியை நாங்கள் மேற்கொள்வோம்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement