dinamalar telegram
Advertisement

சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

Share
விருதுநகர் : காலிபணியிடங்களுக்கு விருப்ப மாறுதல் வழங்குவது, தகுதி சமையலர்கள், உதவியாளர்களுக்கு அமைப்பாளராக பதவி உயர்வு வழங்குவதற்கு முன் பணி மூப்பு பட்டியலை வெளியிட வேண்டும் என வலியுறுத்தி விருதுநகர் ஒன்றிய அலுவலகத்தில் சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். சத்துணவு ஊழியர் சங்க ஒன்றிய கிளை தலைவர் ஜெயலெட்சுமி தலைமை வகித்தார். செயலாளர் ராமர், மாவட்ட இணை செயலாளர் பிச்சை, ஊரக வளர்ச்சி துறை அலுவலர் சங்க மாவட்ட இணைச் செயலாளர் முத்தரசு கண்ணன் பங்கேற்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement