dinamalar telegram
Advertisement

பல்கலையில் மேலும் ஒருவருக்கு கொரோனா

Share
மதுரை: மதுரை காமராஜ் பல்கலையில் இரண்டு மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், மேலும் ஒருவருக்கு பாதிப்பு உறுதியானது.பல்கலையில் உள்ள கவிமணி மற்றும் பாரதியார் விடுதியில் தங்கியுள்ள முதலாமாண்டு வேதியியல் மாணவர் 2 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. பாரதிதாசன் உட்பட மூன்று விடுதிகளிலும் தங்கியுள்ள 250க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் இரண்டாம் ஆண்டு உளவியல் துறை மாணவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. விடுதிகள் இயக்குனர் பாரிபரமேஸ்வரன் கூறுகையில், “மூன்று விடுதிகளும் 3 நாட்களுக்கு மூடப்பட்டு தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டது. மாணவர்கள் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். பிறமாநில மாணவர்கள் பாரதிதாசன் விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்,” என்றார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement