dinamalar telegram
Advertisement

அரசு பள்ளிகளை சூழும் மழை நீர்; மாணவர்கள் பரிதவிப்பு

Share
சிவகாசி : மாவட்டத்தில் அரசு , அரசு உதவி பெறும் பள்ளிகளின் வளாகத்தில் தேங்கும் மழை நீரால் மாணவர்கள் அவதிப்படுகின்றனர். ஆண்டுக்கணக்கில் தொடரும் இதன் சீர் கேடை தவிர்க்க மாவட்ட கல்விதுறை முன்வர வேண்டும்.

மாவட்டத்தில் நகர் , கிராமங்களில் துவக்க , நடுநிலை , உயர்நிலை ,மேல்நிலை பள்ளிகள் இயங்கி வருகின்றன. இவற்றின் பெரும்பாலான பள்ளிகளின் வளாகம், மைதானத்தில் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி விடுகிறது. மாணவர்கள் நடந்து செல்ல சிரமப்படுகின்றனர். இதன் மூலம் அவர்கள் அணிந்துள்ள சீருடை பாழாகிறது. எவ்வளவு கவனமாக சென்றாலும் சகதியில் வழுக்கி விழுகின்றனர்.

ஆசிரியர்களுக்கும் இதே நிலை தான். ஈரத்துடனேயே வகுப்பறைக்குள் வரவேண்டியுள்ளது. இதனால் கல்வி கற்கும் சூழல் மாறுபடுகிறது. சில பள்ளிகளில் மழைநீரானது வகுப்பறைக்குள் வந்து விடுகிறது. உயர்நிலை, மேல்நிலை வகுப்புகளில் மாணவர்கள் கவனமுடன் இருந்து கொள்வார்கள்.

ஆனால் துவக்க நடுநிலை பள்ளி மாணவர்கள் விளையாட்டுத்தனமாக மழை நீரில் விளையாடுவர். இவர்களை தொடர்ந்து ஆசிரியர்கள் கண்காணிப்பது சிரமமே. இதனால் தொற்று நோய்கள் வருவதற்கு வாய்ப்புள்ளது. இதை கருத்தில் கொண்டு அரசு பள்ளிகளின் வளாகத்தை சீரமைக்க கல்வி துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்............

தண்ணீர் தேங்கி சகதியாகிறது

மாவட்டத்தில் அரசு , அரசு உதவி பெறும் பள்ளி வளாகங்கள் பள்ளம் மேடாக உள்ளது. மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி சகதியாக மாறி விடுகிறது. இதில் நடந்து வரும் மாணவர்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். தனியார் பள்ளிகளில் இந்நிலை இல்லை. அரசு பள்ளிகளில் மட்டுமே இந்நிலை தொடர்கிறது. அரசு பள்ளிகளில் மாவட்ட கல்வி நிர்வாகம் கூடுதல் கவனம் செலுத்தி பள்ளி வளாகம் , மைதானத்தில் தண்ணீர் தேங்காதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும்.சண்முகரத்தினம், சமூக ஆர்வலர், சிவகாசி..................
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement