dinamalar telegram
Advertisement

நடந்தாலே சறுக்கும் சகதி; கண்ணீர் விடும் கணேஷ் நகர் மக்கள்

Share
அருப்புக்கோட்டை : பல ஆண்டுகளாக ரோடு, அடிப்படை வசதிகள் இல்லாமலும், கட்டப்பட்டு ஆண்டுக்காணக்காகியும் பயன்பாட்டிற்கு வராத பூங்காவால் கண்ணீர் விடும் நிலையில் அருப்புக்கோட்டை கணேஷ் நகர் மக்கள் உள்ளனர்.

இந்நகர் உருவாகி 25 ஆண்டுகளுக்கு மேலாகியும் அடிப்படை வசதிகள் இல்லை. தெருக்களில் சாக்கடை வசதி இல்லாமல் கழிவு நீர் தேங்கி கிடக்கிறது. பல தெருக்களில் ரோடுகள் இல்லை. தெரு விளக்குகள் இல்லை. இரவு நேரங்களில் இருளாக இருப்பதால் வேலைக்கு சென்று வரும் பெண்கள் அச்சத்துடன் செல்லும் நிலை உள்ளது. மழை காலங்களில் ரோடுகளில் நடக்க முடியாது சகதியுமாக மாறி விடுகிறது.

நகராட்சி மூலம் விநியோகம் செய்யப்படும் வைகை, தாமிரபரணி குடிநீர் இந்த பகுதிக்கு வருவது இல்லை. வீடுகளில் உள்ள 'போர்வெல்' தண்ணீரைதான் பயன்படுத்த வேண்டியுள்ளது.ரோட்டின் ஒரு புறம் உள்ள ஊராட்சி பகுதிக்கு வரும் தாமிரபரணி தண்ணீர், ரோட்டின் மறுபக்கம் உள்ள கணேஷ் நகருக்கு வருவது இல்லை.இப்பகுதி ரேஷன் கடை நான்குவழிச்சாலையை கடந்து, 2 கி.மீ., துாரத்தில் இருப்பதால் மக்கள் சிரமப்படும் நிலையில், கணேஷ் நகரிலே ரேஷன் கடை அமைக்க வேண்டும். வரிகளை தவறாமல் வசூல் செய்யும் நகராட்சியினர் தேவையான வளர்ச்சி பணிகளை செய்வதில் மட்டும் மெத்தனம் காட்டுகின்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement