dinamalar telegram
Advertisement

இணையவழி கருத்தரங்கு

Share
மதுரை: மதுரையில் மத்திய அரசின் மக்கள் தொடர்பு கள அலுவலகம் மற்றும் செந்தமிழ் கல்லுாரி சார்பில் 'இந்திய சுதந்திர போரில் பழங்குடியினர் இயக்கங்கள்' என்ற தலைப்பில் இணையவழி கருத்தரங்கு நடந்தது.மண்டல மக்கள் தொடர்பு அலுவலக இயக்குனர் காமராஜ் பேசுகையில், “அனைவருக்கம் அனைத்தும் கிடைக்க வேண்டும் என்பதற்காக பழங்குடி குழந்தைகளுக்காக 50 ஏகலைவா மாதிரி குடியிருப்பு பள்ளிகளுக்கு அடிக்கல் நாட்டி, 2022க்குள் நாடு முழுவதும் 400க்கும் மேற்பட்ட புதிய பள்ளிகள் உருவாக்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளது நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது,” என்றார்.
கல்லுாரி துணை முதல்வர் ரேவதி சுப்புலட்சுமி, பழங்குடி போராட்ட வீரர்கள் குறித்து காந்திகிராம பல்கலை காந்தி நிர்மானத்திட்ட அருங்காட்சிய இயக்குனர் ரவிச்சந்திரன், உதவி பேராசிரியை செல்வத்தரசி, காப்பாளர் வாணி பேசினர். என்.எஸ்.எஸ்., திட்ட அலுவலர் பூங்கோதை நன்றி கூறினார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement