dinamalar telegram
Advertisement

தமிழக கட்சித் தலைவர்கள் பலருக்கு தமிழ்த்தாய் வாழ்த்து என்றால் என்ன, யார் பாடியது என கேட்டால் தெரியாது...

Share
அ.ம.மு.க., பொதுச் செயலர் தினகரன் அறிக்கை:சென்னை ஐ.ஐ.டி.,யில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில், தமிழ்த்தாய் வாழ்த்து பாடாமல் புறக்கணிக்கப்பட்டு இருப்பது கண்டனத்திற்குரியது. ஐ.ஐ.டி.,யில் அவ்வப்போது இத்தகைய புறக்கணிப்பு நிகழ்வது ஏற்கத்தக்கதல்ல. இதை மத்திய, மாநில அரசுகள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதும் சரியானதல்ல.

பல மாநிலங்களைச் சேர்ந்த, பல நாட்டினர் படிக்கும், ஆராய்ச்சிக் கட்டுரைகள் சமர்ப்பிக்கும் இடத்தில் தேசிய சிந்தனை ஓங்குவது தான் சரியாக இருக்கும் என, கல்லுாரி நிர்வாகம் நினைத்திருக்கும். தமிழக கட்சித் தலைவர்கள் பலருக்கு தமிழ்த்தாய் வாழ்த்து என்றால் என்ன, யார் பாடியது என கேட்டால் தெரியாது. உங்களுக்கு தெரியும் தானே...மாநில பா.ஜ., பொதுச்செயலர் ராம சீனிவாசன் பேச்சு: இந்தியாவில் குடும்ப ஆதிக்கம் இல்லாத கட்சி, பா.ஜ., மட்டுமே. குடும்ப ஆதிக்கம் காரணமாக, காங்கிரஸ் கட்சி நாடு முழுதும் தேய்ந்து வருகிறது. எதிர் காலத்தில், பா.ஜ., ஒன்று தான், இந்தியாவை முழுமையாக ஆளக்கூடிய கட்சியாக இருக்கும்.

பல மாநிலங்களில், பா.ஜ.,விலும் வாரிசு அரசியல், குடும்ப ஆதிக்கம் அதிகரித்து வருகிறதே... எனினும், பிற கட்சிகள் அளவுக்கு இல்லை தான்!பா.ஜ.,விலிருந்து விலகி, திரிணமுல் காங்கிரசில் சேர்ந்துள்ள முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்கா அறிக்கை: அவசர காலங்களில் பயன்படுத்த நம் மத்திய அரசிடம் ஏராளமான பெட்ரோலியம் இருப்பு உள்ளது. அதை, பெட்ரோலிய பொருட்களின் விலை விண்ணை தொட்டுள்ள காலத்திலும் தொடாமல் அமைதி காப்பது ஏன் என்று தான் எனக்கு தெரியவில்லை.

போர், இயற்கை சீற்றங்கள் மற்றும் பெட்ரோலிய பொருட்கள் கிடைக்காத காலத்தில் பயன்படுத்த அந்த இருப்புகள் உள்ளன. இப்போது ஒன்றும் அவசர காலம் இல்லையே...தமிழக பா.ஜ., செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி அறிக்கை: நான் எப்போதுமே அதிகம் பேசமாட்டேன் என்கிறார், முதல்வர் ஸ்டாலின். ஆனால், ''சொல்வதை தான் செய்வோம்; செய்வதை தான் சொல்வோம்' என்பீர்களே. நீங்கள் கூறுவதை பார்த்தால், 'எதையும் சொல்லவில்லை; எதையும் செய்யவில்லை' என, சொல்ல வருகிறீர்களோ?

தி.மு.க.,வில் பல சீனியர் அமைச்சர்கள் இருப்பதால், முதல்வரை புகழ அவர்களுக்கு மனம் இடம் கொடுக்கவில்லை. அதனால், தன்னைப் பற்றி தானே அவர் அடிக்கடி புகழ்ந்து, ஊடகங்களிடம் சிக்கிக் கொள்கிறார்!விடுதலை சிறுத்தைகள் கட்சியின் எம்.பி., ரவிகுமார் அறிக்கை: அரசியலமைப்புச் சட்டம் ஏற்கப்பட்ட நவம்பர் 26ம் நாளை ஒவ்வோர் ஆண்டும், 'அரசியலமைப்புச் சட்ட நாள்' என கடைப்பிடிப்பதற்கு மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. எனவே, தமிழக அரசின் சார்பிலும் அந்த நாளை கொண்டாடுவதற்கு முதல்வர் உத்தரவிட வேண்டும்.

ஏதேனும் விடுபட்டுள்ளதா என கண்ணில் எண்ணெய் விட்டு தேடி, புதுப்புது தகவலாக கூறி, அறிவு ஜீவிகள் நிறைந்த கட்சி எங்களுடையது என காட்ட முயற்சிக்கிறீர்களோ!Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (49)

 • BASKAR TETCHANA - Aulnay ,பிரான்ஸ்

  நம்ம அரசியல் அருகனர்களுக்கு தமிழ் தாய் வாழ்த்து என்றால் என்னவென்று தெரியாது. ஆனால் காந்தி நோட்டு என்றால் என்னவென்று தெரியும்.

 • Madhu - Trichy,இந்தியா

  தமிழை வாழ்த்திப் பாடும்போதும் தேசிய சிந்தனை வெளிப்படுவதுதான் நியாயமானது. இதற்கு மகாகவி பாரதியாரின் பாடல் வரிகள் பலவற்றை எடுத்துக்காட்டாகக் கூற முடியும். ஆனால், இவர்கள் பாரதியை தேசியக் கவிஞராக நினைக்காமல் பார்ப்பனக் கவிஞராக மட்டும் நினைத்த காரணத்தினால்தான், சுந்தரானார் எழுதிய 'மானோன்மணீயம்' நாடகத்திலிருந்து 'நீராரும் கடலுடுத்த..' பாடலைத் தெரிவு செய்து, அதனையும் வெட்டி, தமிழ்த்தாய் வாழ்த்து பாடலாக அங்கீகரித்துள்ளனர் என்பது அடியேனைப் போன்ற பல தமிழ் ஆர்வலர்களின் கருத்து. முன்பெல்லாம் அரசு விழாக்களில் கூட 'கடவுள் வாழ்த்து' பாடுவதுதான் வழக்கமாக இருந்தது. கடவுள் நம்பிக்கை அற்றவர்கள், கடவுள் நம்பிக்கையுள்ளவர்களைப் பழிப்போர், கடவுளை இகழ்வதைக் குறிக்கோளாகக் கொண்டோர் வழியில் வந்தவர்கள் நாட்டின் பாரம்பரியத்திற்கும், கலாச்சாரத்திற்கும் மதிப்பளிக்காமல் 'தமிழ்த்தாய் வாழ்த்து' எனும் புதிய கண்டுபிடிப்பை நிகழ்த்தினார்கள்.

  • meenakshisundaram - bangalore,இந்தியா

   பிராமணர்களை ஒதுக்கும் மாநிலம் இனி மேல் என்றுமே உருப்படாது மக்கள் அவதிப்படவே செய்வார்கள் .இது கண் கண்ட நிதர்சனம் -ப்ராமணரல்லாதாரை( வழக்கம் போல் ) ஏமாற்ற " தமிழகத்தை முதன்மை மாநிலமாக மாற்றுவோம்' என்னும் கோஷம் இப்போது கடைசியாக திமுகவால் பயன் படுத்தப்படுகிறது .

 • J. G. Muthuraj - bangalore,இந்தியா

  அமமுக கட்சி கூட்டங்களில் தமிழ்த்தாய் வாழ்த்து தவறாமல் பாடுகிறீர்களாக்கும்.....

 • raja - Cotonou,பெனின்

  பேசாம விடியல் துக்ளக் தனமா ஆச்சி செய்யும் டுமீல் குப்பத்துல ஒவ்வாவரு டுமிழனும் காலையில் டுமீல்த்தாய் வாழ்த்து பாடிவிட்டுதான் வேலையை தொடங்கணுமுன்னு சட்டம் போடலாம்.....

 • Indhuindian - Chennai,இந்தியா

  சரியா சொன்னீங்க தமிஷ் தாய் வாஸ்து மனோன்மணியம் சுந்தரனார் நாடகத்துலே இருக்கறதை மாத்தி இப்ப இருக்கற மாதிரி பண்ண தமிஷீன தலைவனை அன்னிக்கு யாருமே ஏன் மாத்தீனீங்கன்னு யாரும் கேட்கலையே தமிஷாசிரியர்கள் தமிஷ் காவலர்கள் எல்லோரும் சும்மா தானே இருந்தீங்க

Advertisement