பலத்த மழையால் பயிர்கள் பாதிப்பு
மேலுார்: மேலுார் ஒரு போக பாசன பகுதிக்கு ஆக., 11 பெரியாறு வைகை தண்ணீர் திறக்கப்பட்டு 104 நாட்கள் ஆகிறது.நெற் பயிர்கள் பால் பிடித்து வரும்நிலையில் நேற்று மதியம் முதல் மேலுார் தாலுகாவில் கன மழை பெய்து வருகிறது. இதனால் நெற் பயிர்கள் வயலில் சாய்ந்துள்ளன. ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் செலவு செய்த நிலையில் பயிர்கள் பதராக மாறும் அபாயம் உள்ளதாக விவசாயிகள் அச்சம் தெரிவித்தனர்.
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!