dinamalar telegram
Advertisement

வெங்காயம், வாழை பயிர் காப்பீடு செய்ய யோசனை

Share
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் தாலுகாவில் ஏராளமான விவசாயிகள் வாழை, வெங்காயம் பயிரிட்டுள்ளனர்.ராபி பருவத்திற்கான பிரதமரின் பயிர் காப்பீடு திட்டத்தின்கீழ் திருப்பரங்குன்றம், நாகமலை புதுக்கோட்டை, மதுரை மேற்கு பிர்க்காக்களுக்குட்பட்ட வருவாய் கிராமங்களில் வாழை பயிரிட்டுள்ள விவசாயிகள் ஏக்கருக்கு ரூ. 3,211,திருப்பரங்குன்றம், வலையங்குளம் பிர்க்காவிற்குட்பட்ட பகுதிகளில் வெங்காயம் பயிரிட்டுள்ள விவசாயிகள் ஏக்கருக்கு ரூ. 1,906 பிரிமியம் செலுத்தியும் காப்பீடு செய்யலாம்.

விவசாயிகள் கணினி, சிட்டா, அடங்கல், ஆதார், ரேஷன் கார்டு, வங்கி புத்தகம் முதல் பக்க நகல், போட்டோவுடன் அருகில் உள்ள தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம், இ சேவை மையங்களில் பிரிமியத்தை செலுத்தி காப்பீடு செய்யலாம் என தோட்டக்கலை உதவி இயக்குனர் பேபி தெரிவித்தார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement