dinamalar telegram
Advertisement

நரியம்பட்டியில் பண்ணைப்பள்ளி

Share
செல்லம்பட்டி: செல்லம்பட்டி அருகே நரியம்பட்டி பூமிநாதன் நெல் வயலில் திருந்திய நெல் சாகுபடி முறை குறித்து விவசாயிகளுக்கு பண்ணைப்பள்ளி பயிற்சி நடந்தது.திருந்திய நெல் சாகுபடி நாற்றாங்கால், இயந்திர நடவு, கோனோவீடர் கருவி கொண்டு களை எடுத்தல் குறித்து விளக்கப்பட்டது. திருமங்கலம், குலமங்கலம் முன்னோடி விவசாயிகள் காளிமுத்து கிருஷ்ணன், செல்லம்பட்டி வேளாண்மை உதவி இயக்குனர் சுமதி, உதவி வேளாண் அலுவலர் மணிகண்டன், தொழில்நுட்ப மேலாளர் ராபின் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.பயறு வகை சாகுபடி: சிறுபட்டியில் பயறு வகை சாகுபடி, அறுவடைக்குப்பின் பாதுகாப்பு தொழில்நுட்பங்கள் குறித்து மதுரை வேளாண் அறிவியல் நிலைய உதவிப்பேராசிரியர் கிருஷ்ணகுமார் விளக்கினார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement