dinamalar telegram
Advertisement

ரோட்டில் தேங்கியுள்ள நீரால் மக்கள் அவதி

Share
Tamil News
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் நிலையூர் ரோடு ஓராண்டிற்கு முன் ரூ. ஒரு கோடியே 40 லட்சத்தில் சீரமைக்கப்பட்டது.அந்த ரோட்டில் ஹார்விபட்டி ரயில்வே கேட் உள்ளிட்ட பகுதிகளில் 20 நாட்களுக்கு மேலாக நீர் தேங்கியுள்ளது. பானாங்குளம் கண்மாய்க்கும் ரோட்டிற்கும் இடையிலுள்ள பள்ளத்திலிருந்து வெளியேறும் மழைநீர், கண்மாய் கசிவுநீர் ரோட்டில் நிற்கிறது.

வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகின்றனர். தொடர்ந்து நீர் தேங்கியிருந்தால் ரோடு முழுமையாக சேதமடைந்து விடும். ரோட்டிலுள்ள நீரை அகற்றவும், ரோட்டையொட்டியுள்ள பள்ளத்தின் கரையை உயர்த்தவும் நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement