dinamalar telegram
Advertisement

902 கிராமங்களில் மாடுகளுக்கு கோமாரி தடுப்பூசி முகாம்

Share
மதுரை: மதுரை மாவட்டத்தில் 902 கிராமங்களிலுள்ள ஒரு லட்சத்து 30 ஆயிரத்து 740 மாடுகள், கன்றுகளுக்கு கோமாரி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக கால்நடை பராமரிப்பு மண்டல இணை இயக்குனர் நடராஜ்குமார் தெரிவித்துள்ளார்.

தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டத்தின் கீழ் கோமாரி தடுப்பூசி முகாம் மற்றும் கால்நடை நலம் காக்கும் முகாம் இணை இயக்குனர் தலைமையில் பல கிராமங்களில் நடந்தது. உதவி இயக்குனர்கள் திருவள்ளுவர், சரவணன் மற்றும் டாக்டர் குருசாமி, ஆய்வாளர்கள் பிரபாகரன், பிரதிபா மேரி, மீனாட்சி, சுப்பம்மாள், காசிவிஸ்வநாதன், சீனிவாச பெருமாள் ஆகியோர் சின்ன பொக்கம்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் முகாம் நடத்தினர்.

இணை இயக்குனர் கூறியதாவது: ஜூனில் மாடுகளில் காணை நோய் மதுரையில் கண்டறியப்பட்டது. மாவட்டத்தில் ஒரு லட்சத்து 99 ஆயிரத்து 850 மாடு, கன்றுகள் உள்ளன. இதுவரை 902 கிராமங்களில் மாடுகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. கொட்டாம்பட்டி, கள்ளிக்குடியில் டாக்டர்கள் இல்லாததால் தடுப்பூசி செலுத்துவதில் தாமதம் ஏற்பட்டது. மீதமுள்ள 168 கிராமங்களில் 69 ஆயிரத்து 110 மாடுகளுக்கு இம்மாத இறுதிக்குள் தடுப்பூசி செலுத்தப்படும் என்றார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement