dinamalar telegram
Advertisement

10 மாதங்களில் பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசி 1.22 லட்சம் கிலோ

Share
மதுரை : மதுரை மாவட்டத்தில் ரேஷன் அரிசி கடத்தியதாக 10 மாதங்களில் 200 பேர் கைது செய்யப்பட்டு 1.22 லட்சம் கிலோ அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. ஆனாலும் அரிசி கடத்தல் தொடர்வது போலீசாருக்கு சவாலாக உள்ளது.

இம்மாவட்டத்தில் 1386 ரேஷன் கடைகள் உள்ளன. சில கடை ஊழியர்கள் ரேஷன் பொருட்களை மாவு மில் உரிமையாளர்கள், புரோக்கர்கள், கடைக்காரர்களுக்கு விற்று சம்பாதிக்கின்றனர். அவர்களை உணவு கடத்தல் தடுப்புப் பிரிவு எஸ்.பி., பாஸ்கரன் தலைமையில் டி.எஸ்.பி., இளங்கோவன், இன்ஸ்பெக்டர் பிரேம்ஆனந்த் உள்ளிட்டோர் தொடர்ந்து கைது செய்து வருகின்றனர்.

இந்தாண்டில் கடந்த 10 மாதங்களில் 200 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் 2 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர். 1.22 லட்சம் கிலோ ரேஷன் அரிசி மாவு மில்களிலும், வீடுகளிலும் பறிமுதல் செய்யப்பட்டது. இருந்தாலும் கடத்தல் தொடர்கிறது.
போலீசார் கூறியதாவது: புரோக்கர்கள் மூலம் ரேஷன் பொருட்கள் கடத்தல் நடக்கிறது. அவர்களில் பெரும்பாலனோர் கைது செய்யப்பட்டுள்ளனர். எங்கள் பரிந்துரைபடி கடை விற்பனையாளர் சிலர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கடத்தலில் தொடர்புடையவர்களை கண்காணித்து வருகிறோம் என்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement