dinamalar telegram
Advertisement

ஒரு போன் போதுமே

Share
Tamil News
* வீணாகும் லாரி தண்ணீர்மதுரை மீனாம்பாள்புரம் எல்.ஐ.சி., காலனி 2வது தெருவில் மாநகராட்சி லாரிகள் மூலம் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. பெரிய ரப்பர் குழாய் மூலம் குடங்களுக்கு நிரப்பும் போது பாதிக்கு பாதி நீர் வீணாகிறது.- அபுபக்கர், மீனாம்பாள்புரம்.

* மழைநீர் சிலாப் சேதம்மதுரை மாநகராட்சி வார்டு எண் 76 வேல்முருகன் நகர் ஸ்ரீனிவாஸ் அபார்ட்மென்ட் பி பிளாக் வாசலில் மழைநீர் கால்வாயில் அமைக்கப்பட்டுள்ள சிலாப்கள் உடைந்துள்ளதால் உள்ளே செல்ல முடியவில்லை. கால்வாய் திறந்திருப்பதால் கொசுக்கள் அதிகம் உற்பத்தியாகிறது.- சூரியநாராயணன், வேல்முருகன் நகர்.

* படையெடுக்கும் பாம்புகள்மதுரை ஒத்தக்கடை அய்யப்பன்நகர் 4வது தெருவில் கண்மாய் தண்ணீருடன் சாக்கடை கழிவுநீர், மழைநீர் சேர்ந்து முழங்கால் அளவு தேங்கியுள்ளது. இந்த தண்ணீர் வடியாததால் பாம்புகள் படையெடுக்கின்றன. பொதுமக்கள் அச்சத்துடன் குடியிருக்கின்றனர்.- அழகர்சாமி, அய்யப்பன் நகர்.

* எரியாத தெருவிளக்குகள்மதுரை மாநகராட்சி வார்டு எண் 76 வசந்தநகர் 3வது தெருவிலுள்ள மின் கம்பம் எண் 15 ல் 20 நாட்களாக மின்விளக்கு எரியவில்லை. ரோடு இருட்டாக இருப்பதால் இரவில் பயணிப்பது அவதியாகயிருக்கிறது.- வெங்கடசுப்ரமணியன், வசந்தநகர்.

கோச்சடை நடராஜ்நகர் விரிவாக்கம் ஆபீசர்ஸ் டவுன் முதல் தெருவில் உள்ள மின்கம்பத்தில் விளக்கு சேதமடைந்தது. மின் வயரில் காகம் சிக்கி கிடந்தது. மின் விளக்கு எரியாததால் திருட்டு, வழிப்பறி அபாயம் உள்ளது.- நடராஜன், கோச்சடை.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement