dinamalar telegram
Advertisement

மதுரையில் நான்கு கோயில்களின் அன்னதானத்திற்கு தரச்சான்று

Share
Tamil News
மதுரை : மதுரையில் அழகர்கோவில் கள்ளழகர், சோலைமலை முருகன், கூடலழகர் பெருமாள் மற்றும் திருப்பரங்குன்றம் முருகன் கோயில்களில் வழங்கப்படும் அன்னதானத்திற்கு தரச்சான்றிதழ் வழங்கியுள்ளதாக உணவு பாதுகாப்பு அலுவலர் ஜெயராம பாண்டியன் தெரிவித்தார்.

அவர் கூறியதாவது: கோயில்களில் அன்னதானம் வழங்கினால் தரச்சான்றிதழ் கட்டாயம் பெற வேண்டும். நான்கு கோயில்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளன. மீனாட்சியம்மன் கோயில் உட்பட 34 கோயில்களின் உணவு மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வில் உள்ளன.

விரைவில் சான்றிதழ் வழங்கப்படும்.பெரிய ஓட்டல் மற்றும் பேக்கரிகளில் சுகாதார சான்றிதழ் வழங்க அங்குள்ள தண்ணீர், சமைத்த உணவின் மாதிரிகளை ஆய்வுக்காக சேகரிக்கிறோம். சுகாதாரமான உணவு தயாரிப்பு குறித்து பயிற்சி அளிக்கிறோம்.

ஆய்வு செய்த பின் 20 நாட்களுக்குள் சான்றிதழ் வழங்கப்படும். இதுவரை 66 ஓட்டல், பேக்கரிகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. பள்ளி, கல்லுாரி, தொழிற்சாலை, மருத்துவமனை, மில் கேன்டீன்களின் உணவு தரத்தை பரிசோதித்து சான்றிதழ் வழங்கப்படுகிறது. இதுவரை 8 நிறுவனங்கள் இச்சான்றிதழ் பெற்றுள்ளன என்றார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement