dinamalar telegram
Advertisement

படூருக்கு சாலை வசதி கலெக்டரிடம் மனு

Share
உத்திரமேரூர்-காட்டாங்குளம் - படூர் கிராமத்திற்கு இடையே புதிய இணைப்பு சாலை ஏற்படுத்த கோரி, காட்டங்குளம் ஊராட்சி தலைவர் செல்வக்குமார், காஞ்சிபுரம் கலெக்டரிடம் அளித்த மனு விபரம்:உத்திரமேரூர் ஒன்றியம் காட்டங்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட காட்டங்குளம் காலனி மக்கள், படூர் கிராமத்திற்கு சென்று வர சாலை வசதி இல்லை.படூரில் உள்ள அரசு தொடக்க பள்ளி, ஆரம்ப சுகாதார நிலையம், தொடக்க வேளாண் கூட்டுறவு சங்க அலுவலகம், தபால் அலுவலகம் போன்ற இடங்களுக்கு செல்ல, தனியார் நிலங்களை பயன்படுத்தி, ஒத்தையடி பாதையில் செல்கின்றனர்.இதேபோல், காட்டங்குளத்தில் உள்ள கிராம நிர்வாக அலுவலகம், ஊராட்சி அலுவலகத்திற்கு, தனியார் நிலங்களையே படூர் மக்கள் பயன்படுத்துகின்றனர்.படூர் - காட்டாங்குளம் சாலை வசதி ஏற்படுத்தி தர வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement