dinamalar telegram
Advertisement

பெற்றோரை தடுப்பூசி செலுத்தி ெகாள்ள மாணவர்கள் அறிவுறுத்தணும்: கலெக்டர்

Share
செங்கல்பட்டு--''கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள, பெற்றோரை, மாணவர்கள் கட்டாயப்படுத்த வேண்டும்,'' என, கலெக்டர் ராகுல்நாத் பேசினார்.செங்கல்பட்டு மாவட்டத்தில், பள்ளிக்கல்வித் துறை சார்பில், 'இல்லம் தேடி கல்வி' திட்ட விழிப்புணர்வு கலைப் பயண துவக்க விழா, செங்கல்பட்டு தனியார் பள்ளியில் நேற்று நடந்தது. கலெக்டர் ராகுல்நாத் பங்கேற்று, விழிப்புணர்வை துவக்கி வைத்து பேசியதாவது:இல்லம் தேடி கல்வி விழிப்புணர்வு, 12 மாவட்டங்களில் நடந்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில், விழிப்புணர்வு குழுவின் பயணத்தை துவக்கி வைத்துள்ளேன்.இக்குழு வாயிலாக மாவட்டம் முழுதும், ஒரு நாளைக்கு இரண்டு பள்ளிகளில் மாணவர்களுக்கும், பொதுமக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள, பெற்றோர் மற்றும் பொதுமக்களிடம், மாணவர்கள் வலியுறுத்த வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார்.செங்கல்பட்டு எம்.எல்.ஏ., வரலட்சுமி, முதன்மை கல்வி அலுவலர் ரோஸ் நிர்மலாமேரி மற்றும் பலர் பங்கேற்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement