dinamalar telegram
Advertisement

கல்லுாரி மாணவர்களுக்கு விவசாயிகள் கள பயிற்சி

Share
திருக்கழுக்குன்றம்,-நெரும்பூர் பகுதியில், வேளாண்மை மாணவர்கள் கள பயிற்சி பெற்றனர்.அச்சிறுப்பாக்கம், பாபுராயன்பேட்டை பகுதி, எஸ்.ஆர்.எம்., வேளாண்மை அறிவியல் கல்லுாரியில், இறுதியாண்டு படிக்கும் மாணவர்கள், விவசாய கள பயிற்சிக்காக, திருக்கழுக்குன்றம், லத்துார் வட்டார பகுதிகளில் முகாமிட்டுள்ளனர்.மாணவர்களான நரேன் சஞ்சய், கீர்த்திவாசன், ஜான் டென்னிஸ், சந்தீப் சரண், சுரேஷ், கிரீசன் ஆகியோர், ஊரக பகுதி செயல்முறை கள பயிற்சிக்காக, திருக்கழுக்குன்றம் அடுத்த, நெரும்பூர் பகுதியில் முகாமிட்டனர்.விவசாயிகளிடம், பயிர் சாகுபடி முறைகள், மண்ணிற்கேற்ப விளைச்சல் தன்மை, பாசனம், விவசாயம், தோட்டம் குறித்த சந்தேகங்களுக்கு விளக்கம் பெற்றனர்.அசோலா தீவன பயன்களை விளக்கி, அதன் தயாரிப்பு முறை, கல்லுாரியில் கற்றவை குறித்து, விவசாயிகளிடம் எடுத்து கூறினர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement