dinamalar telegram
Advertisement

பள்ளியில் தேங்கிய மழை நீர் அகற்றம் 

Share
திருப்போரூர்,-ஏகாட்டூர் அரசு பள்ளி வளாகத்தில் தேங்கிய மழை நீர், ஊராட்சி நிர்வாகத்தால் அகற்றப்பட்டு வருகிறது.திருப்போரூர் அடுத்த முட்டுக்காடு ஊராட்சி ஏகாட்டூரில், ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி உள்ளது. இதில் 50 மாணவ - மாணவியர் பயில்கின்றனர்.சமீபத்தில் பெய்த மழை நீர், பள்ளியில் தேங்கியது. அதில் நடந்து செல்ல மாணவர்கள் சிரமப்பட்டனர்.இதையடுத்து, ஊராட்சி தலைவர் சங்கீதா மற்றும் வார்டு உறுப்பினர்கள், பள்ளி வளாகத்தில் தேங்கிய மழை நீரை, மோட்டார் பம்ப் வைத்து அகற்றினர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement