dinamalar telegram
Advertisement

மண் பரிசோதனை செய்ய அறிவுரை

Share
செங்கல்பட்டு--செங்கல்பட்டு மாவட்ட வேளாண் இணை இயக்குனர் சுரேஷின் செய்திக்குறிப்பு:மண் வளத்திற்கு ஏற்ப, பயிர்களுக்கு தழை, மணி, சாம்பல் மற்றும் நுண்ணுாட்ட சத்துக்கள் வழங்க வேண்டும். இதனால் உரச்செலவு குறைவதோடு, மண்ணின் வளத்தை பெருக்கி, அதிக மகசூல் பெறலாம்.செங்கல்பட்டு மாவட்ட விவசாயிகள், விவசாய நிலத்தின் மண் தன்மை அறிய, மண் பரிசோதனை நிலையத்தில் 20 ரூபாய் செலுத்தி அறியலாம். வேளாண் துறை உற்பத்தி செய்யும் அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா, ரைசோபியம், பொட்டாஷ், பாக்டிரியா போன்ற உயிர் உரங்களையும், நுண்ணுாட்ட உரங்களையும், வேதி உரங்களுக்கு மாற்றாக பயன்படுத்த வேண்டும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement