dinamalar telegram
Advertisement

டிச., 5ல் காஞ்சிபுரத்தில் இலவச கண்புரை அறுவை சிகிச்சைக்கான மருத்துவ பரிசோதனை முகாம்,

Share
காஞ்சிபுரம்-காஞ்சிபுரத்தில், இலவச கண்புரை அறுவை சிகிச்சைக்கான மருத்துவ பரிசோதனை முகாம், டிச., 5ல் நடைபெறுகிறது என, தெரிவிக்கப்பட்டுள்ளது.இது குறித்து, காஞ்சிபுரத்தைச் சேர்ந்த கண் சிகிச்சை முகாம் ஏற்பாட்டாளர் எஸ்.ஆனந்தகுமார் கூறியதாவது:காஞ்சிபுரம் ஆனந்தா டிரேடர்ஸ் அரிசி மண்டி மற்றும் சென்னை அரவிந்த் கண் மருத்துவமனை சார்பில், மாதந்தோறும் காஞ்சிபுரத்தில் இலவச கண்சிகிச்சை முகாம் நடத்தப்பட்டு வருகிறது.கடந்த மாதம் நடந்த முகாமில், 57 பேருக்கு இலவச கண்புரை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.இம்மாதத்திற்கான மருத்துவ முகாம், பெரிய காஞ்சிபுரம் குஜராத்தி திருமண மண்டபத்தில், வரும், டிச., 5ல், காலை 8:30 மணிக்கு நடைபெற உள்ளது.காஞ்சிபுரம் அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திராவிடமணி கருணா, முகாமை துவக்கி வைக்கிறார்.சென்னை அரவிந்த் கண் மருத்துவமனையைச் சேர்ந்த கண் மருத்துவ நிபுணர்கள் பங்கேற்கின்றனர்.முகாமில், கண்புரை நோய் உள்ளவர்கள் அறுவை சிகிச்சைக்காக தேர்வு செய்யப்பட்டு, சென்னை அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு முற்றிலும் இலவசமாக விழிலென்ஸ் பொருத்தி, அறுவை சிகிச்சை செய்யப்பட உள்ளது.பங்கேற்க விரும்புவோர், 97914 08768, 97516 11431 ஆகிய மொபைல் போன் எண்களில் முன்பதிவு செய்யலாம்.இவ்வாறு, அவர் கூறினார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement