dinamalar telegram
Advertisement

காஸ்ட்லி கிப்ட்...! மணமக்களுக்கு தக்காளி பரிசு

Share
Tamil News
கோவை : தமிழகத்தில் பருவமழை தீவிரத்தால் வரத்து குறைந்து, தக்காளி விலை உச்சம் தொட்டுள்ளது. இச்சூழலில், கோவைகுறிச்சி பிரிவு பகுதியில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் நேற்று திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது.

மணமகன், விஜய் மக்கள் இயக்கத்தில் நிர்வாகியாக இருப்பதால், திருமண வரவேற்புக்கு வந்திருந்த அவரது நண்பர்கள் மற்றும் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள், மணமக்களுக்கு தலா இரண்டு கிலோ அளவிலான தக்காளிகளை தட்டில் வைத்து அன்பளிப்பாக வழங்கினர். இப்போதைய நிலையில் தக்காளி தான் மிகவும் 'காஸ்ட்லியான கிப்ட்' என்பதை உணர்த்தும் வகையில் மணமக்களுக்கு பரிசளித்தனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து (1)

  • chennai sivakumar - chennai,இந்தியா

    இது போல ஒரு காலத்தில் வெங்காயம் மணமக்களுக்கு கல்யாண பரிசாக வழங்கப்பட்டது.ஹி ஹி ஹி ஹி

Advertisement