dinamalar telegram
Advertisement

மழைக்கால நோயை தடுக்க சுகாதார துறை நடவடிக்கை

Share
வாலாஜாபாத்-வடகிழக்கு பருவ மழை மற்றும் பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இருப்பதால், வாலாஜாபாத் ஒன்றியத்தில் வில்லிவலம், கோயம்பாக்கம், கீழ்ஒட்டிவாக்கம், புளியம்பாக்கம் உள்ளிட்ட பல கிராமங்களில் தண்ணீர் தேங்கியது; சுகாதார பாதிப்பு ஏற்பட்டது.அங்கு நோய் ஏற்படாமல் இருக்க, கொரோனா தடுப்பூசி போடும் முகாம்கள், சிறப்பு காய்ச்சல் முகாம்களாக மாற்றப்பட்டு உள்ளன.அதேபோல் அந்தந்த உள்ளாட்சி நிர்வாகங்களுடன் இணைந்து, தெருக்கள் மற்றும் தண்ணீர் தேங்கிய இடங்களில் பிளீச்சிங் பவுடர் துாவி, சுகாதார தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.முத்தியால்பேட்டை, களியனுார், வேண்பாக்கம் உள்ளிட்ட பல கிராமங்களில் கொசு ஒழிப்பு புகை மருந்து அடித்தனர்.வாலாஜாபாத் வட்டார மருத்துவ அலுவலர் உமா கூறியதாவது:தெருக்கள்தோறும், ஊராட்சி நிர்வாகங்கள் பிளீச்சிங் பவுடர் துாவ வேண்டும் என, கேட்டுக்கொண்டுள்ளோம். அதேபோல், ஒரு வீட்டிற்கு அரை கிலோ பிளீச்சிங் பவுடர் கொடுத்து, சுகாதார தடுப்பு பணிகளை செய்து கொள்ள வேண்டும் என, வீட்டுக்காரர்களுக்கு அறிவரை வழங்கப்பட்டுள்ளது.காயச்சல், சளி இருந்தால் அருகில் இருக்கும் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவரை நாட வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement